/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்
/
தேசிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்
ADDED : நவ 11, 2025 10:50 PM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையத்தின் சார்பில், தேசிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் ரோட்டரி சங்கம் சமுதாய குழு இணைந்து முகாமை நடத்தியது.
ஒரு வார கால லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாமை, நாயக்கன்பாளையத்தில் உள்ள ஜீவகாருண்ய சேவா ஆசிரம நிர்வாகி செல்வராஜன் துவக்கி வைத்து, நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல, இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் லஞ்சம் வாங்குவது மற்றும் கொடுப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை உணர்ந்து, அதிலிருந்து நம் நாட்டை மீட்டு, முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என, குறிப்பிட்டார். நாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
முகாமையொட்டி, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், வினாடி வினா நடந்தன. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, லஞ்சத்தை ஒழிக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடந்தது.
முகாமில், ஒருங்கிணைப்பாளர் சரசு, கவி ரத்னா, சதீஷ்குமார், பொன்னுசாமி உள்ளிட்ட சமுதாய குழு உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.

