/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் நடந்த தேசிய சாம்பியன் கார் பந்தயம் நிறைவு
/
கோவையில் நடந்த தேசிய சாம்பியன் கார் பந்தயம் நிறைவு
கோவையில் நடந்த தேசிய சாம்பியன் கார் பந்தயம் நிறைவு
கோவையில் நடந்த தேசிய சாம்பியன் கார் பந்தயம் நிறைவு
ADDED : நவ 17, 2025 01:54 AM

போத்தனூர்: கோவையில் ஜே.கே.டயர், எப்.எம்.எஸ்.சி.ஐ., சார்பில் நடந்த, 28வது தேசிய சாம்பியன் கார் பந்தயம் நிறைவடைந்தது.
செட்டிபாளையம் அருகே கரி மோட்டார் ஸ்பீடுவேயில் இவ்வாண்டுக்கான இறுதி சுற்று பந்தயம் நேற்று முன்தினம் துவங்கியது.
இதில் நோவிஸ் கோப்பைக்கான முதல் போட்டியில் புவன் போனு, லோகித்லிங்கேஷ் ரவி, அபிஜித், இரண்டாம் போட்டியில் புவன் போனு, அவி மாலவள்ளி, ஓஜாஸ் சர்வே ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
நேற்று நடந்த போட்டியில், லோகித் லிங்கேஷ் ரவி, பிரதிக் அசோக், ஓஜாஸ் சர்வே ஆகியோர் கடும் போட்டியை வெளிப்படுத்தினர்.
கடைசி இரு சுற்றுகளில் அவி மாலவள்ளி இம்மூவருக்கிடையே வந்தார். இறுதியில், லோகித் லிங்கேஷ் ரவி, அவி மாலவள்ளி, பிரதிக் அசோக் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
லெவிடாஸ் கோப்பைக்கான பந்தயங்களில், சித்தார்த் பாலசுப்ரமணியம், ஜெய் பிரசாந்த் வெங்கட், வினோத், இரண்டாவது போட்டியில் ஜெய் பிரசாந்த் வெங்கட், சித்தார்த், நிதின் ஆகியோரும் வென்றனர்.
நேற்று நடந்த போட்டியில், துவக்கம் முதலே பாலாஜி ராஜு, நிதின், அக் ஷய் முரளிதரன், சித்தார்த் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. ஒருவருக்கொருவர் முதலிடத்தை பிடிக்க முந்தினர். ஆறாவது சுற்றில் மூன்றாமிடத்திலிருந்த ஜெய் பிரசாந்த், சித்தார்த், பாலாஜி ராஜு ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு வந்தார்.
இறுதியில் அவரே முதலிடத்தை பிடிக்க, பாலாஜிராஜு, சித்தார்த் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
ராயல் என்பீல்ட் கான்டினென்டல் கோப்பைக்கான முதல் போட்டியில், அனிஷ் ஷெட்டி, நவனீத் குமார், கயன்பட்டேல் ஆகியோர் வென்றனர்., நேற்று நடந்த போட்டியிலும் இம்மூவருமே முதல் மூன்று இடங்களை வென்றனர்.
எல்ஜி பி பார்முலா 4 முதல் போட்டியில் துருவ்கோஸ்வாமி, ருஹான் ஆல்வா, தில்ஜித் ஆகியோரும், இரண்டாவது போட்டியில் மெஹுல் அகர்வால், துருவ் கோஸ்வாமி, ருஹான் ஆல்வா. ஆகியோரும், நேற்று நடந்த போட்டியில் துருவ் கோஸ்வாமி, ருஹான் ஆல்வா, மோஹித் குமரன் ஆகியோரும், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
எப் 4 பிரிவில், சாச்செல் ரோட்ஜ், காஸி மோத்லேகர், ஷான் சந்தாரியா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, ஜே.கே.டயர் மற்றும் எப்.எம்.எஸ்.சி.ஐ., அதிகாரிகள் கோப்பையை வழங்கினர்.

