UPDATED : செப் 02, 2026 11:15 PM
ADDED : செப் 02, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
கோவை: இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி டீன் வீரமணி, கடந்த ஜூனில் பணி ஓய்வு பெற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் முருகேசனுக்கு கூடுதலாக, டீன் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மருத்துவ கல்லுாரி டீன்களுக்கு இடமாறுதல் மற்றும் ஐந்து பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதில் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை புதிய டீன் ஆக, ஜெயசிங் இன்று பொறுப்பேற்கிறார். இவர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து பணிமாறுதல் பெற்றுள்ளார். ஏற்கனவே கோவை அரசு மருத்துவமனையில் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவராக இவர் பணிபுரிந்துள்ளார்.
