புதிதாக வாங்கிய மில்லிங் எந்திரம் பழுது 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தர உத்தரவு
புதிதாக வாங்கிய மில்லிங் எந்திரம் பழுது 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தர உத்தரவு
ADDED : ஜூலை 09, 2026 06:21 AM
கணபதி: கணபதி கட்ட பொம்மன் வீதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ்; இன்ஜினீயரிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சிக்மா மில்லிங் எந்திரம் வாங்க சிங்காநல்லுார் எஸ் அண்ட் டி என்ற நிறுவனத்தை 2024, ஏப்., 9ல் அணுகினார். இதற்கான விலை ரூ.14.94 லட்சத்தை வங்கியில் கடன் பெற்று செலுத்தி மார்ச் 2025 ல் எந்திரத்தை பெற்றார்.
ஆய்வில், ஆர்டர் கொடுத்த செங்குத்து இணைப்புடன் கூடிய சிக்மா மில்லிங் எந்திரம் வழங்காமல், சாதாரண மாடல் எந்திரம் வழங்கப்பட்டிருந்தது தெரிந்தது.
இதுகுறித்து கேட்ட போது நிறுவனத்தினர் முறையான பதில் அளிக்கவில்லை. எந்திரமும் சரியாக செயல்படாமல் அடிக்கடி பழுது ஏற்பட்டது.
இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், '' எந்திரம் பழுதானதால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, ரூ.5 லட்சம், வழக்கு செலவு ரூ.10,000 வழங்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
