/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆர்த்தோ ஒன்' கூடைப்பந்து; ராஜலட்சுமி மில்ஸ் 'சாம்பியன்'
/
'ஆர்த்தோ ஒன்' கூடைப்பந்து; ராஜலட்சுமி மில்ஸ் 'சாம்பியன்'
'ஆர்த்தோ ஒன்' கூடைப்பந்து; ராஜலட்சுமி மில்ஸ் 'சாம்பியன்'
'ஆர்த்தோ ஒன்' கூடைப்பந்து; ராஜலட்சுமி மில்ஸ் 'சாம்பியன்'
ADDED : டிச 02, 2025 07:37 AM

கோவை: கொங்கு மண்டல அளவில், 14, 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி, மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் ஏழு நாட்கள் நடந்தது. ஆர்த்தோ ஒன் எலும்பியல் சிறப்பு மையம் சார்பில் நடந்த, கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், 100க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இதில், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலைப் பள்ளி அணி, 60-41 என்ற புள்ளிகளில், பொள்ளாச்சி யங் பிளட் கூடைப்பந்து கிளப் அணியையும், மாணவியர் பிரிவில், அல்வேர்னியா மெட்ரிக் பள்ளி 'ஏ' அணி, 64-56 என்ற புள்ளிகளில், எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் பள்ளி அணியையும் வென்றன.
18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில், ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலைப் பள்ளி அணி, 96-79 என்ற புள்ளி கணக்கில் எஸ்.டி.ஏ.டி., அணியையும், மாணவியர் பிரிவில், ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலைப் பள்ளி அணி, 69-52 என்ற புள்ளிகளில் எஸ்.வி.ஜி.வி., அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, போலீஸ் துணை கமிஷனர் திவ்யா பரிசுகள் வழங்கினார்.

