/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழி அடைக்கப்பட்டதால் பயணிகள் அவதி
/
ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழி அடைக்கப்பட்டதால் பயணிகள் அவதி
ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழி அடைக்கப்பட்டதால் பயணிகள் அவதி
ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழி அடைக்கப்பட்டதால் பயணிகள் அவதி
ADDED : டிச 02, 2025 06:41 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் வைத்துள்ள அடைப்பை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், 8 கோடி ரூபாய் செலவில், புதிதாக கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக பஸ்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லாமல், பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுகின்றன. மேலும் பஸ் ஸ்டாண்டிலிருந்து, ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் யாரும் செல்லாத வகையில் முற்றிலுமாக தடுப்பு வைத்து, பல மாதங்களாக அடைத்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு காலை 8:20 க்கு மணிக்கு பாசஞ்சர் ரயில் செல்கிறது. இந்த ரயிலில் சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். காலையில் செல்லும் ரயிலில், கல்லூரிகளுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். காலையில் சிறுமுகை, அன்னூர் பஸ்களில் வரும் பயணிகள், பஸ் ஸ்டாண்டில் இருந்து நகராட்சி பூஸ்டர் நீரேற்று நிலையம் வழியாக, ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வது வழக்கம்.
பஸ் ஸ்டாண்டில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால், பூஸ்டர் வழியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் யாரும் செல்லாத வகையில், முற்றிலுமாக தகரத்தால் அடைத்து வைத்துள்ளனர். இதனால் வெளியூர்களில் இருந்து பஸ்சில் வரும் பயணிகள், காலை, 8:20 மணிக்கு செல்லும் ரயிலை பிடிக்க, அரை கிலோமீட்டர் சுற்றிக் கொண்டு செல்கின்றனர். இதனால் பெரும்பாலான பயணிகள் ரயிலை பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில்,' பஸ் ஸ்டாண்டில் இருந்து, 100 மீட்டர் தூரத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் வழியை அடைத்து விட்டனர். இதனால் அரை கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வயதானவர்கள் அரை கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் உள்ள அடைப்பை எடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

