தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு மரியாதையுடன் கவிஞர் புவியரசு உடல் தகனம்

 அரசு மரியாதையுடன் கவிஞர் புவியரசு உடல் தகனம்

 அரசு மரியாதையுடன் கவிஞர் புவியரசு உடல் தகனம்


ADDED : ஜூலை 01, 2026 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 11:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: எழுத்தாளர், கவிஞர் புவியரசு உடல், அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

கலை, இலக்கிய செயல்பாடு களில், 60 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டவர் கவிஞர் புவியரசு, 95. கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, நாடகம் என, 100-க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருதை, இருமுறை பெற்றுள்ளார்.

வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள பிரஸ் காலனியில் காலமானார். இவரது உடல், பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள நித்தியானந்தா மின் மயானத்தில், 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

கவிஞர்கள் சிற்பி, சிதம்பரநாதன் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க படைப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us