/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்; அ.தி.மு.க.,வினர் முற்றுகை
/
ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்; அ.தி.மு.க.,வினர் முற்றுகை
ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்; அ.தி.மு.க.,வினர் முற்றுகை
ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்; அ.தி.மு.க.,வினர் முற்றுகை
ADDED : டிச 02, 2025 06:27 AM

வால்பாறை: தேர்தலில் கள்ள ஓட்டு போட வசதியாக போலியான விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளதாக கூறி, அதிகாரிகளை அ.தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர்.
வால்பாறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த மாதம், 4ம் தேதி முதல் நடந்து வருகிறது.
வால்பாறை மலைப்பகுதியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் வினியோகித்து வருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் திரும்ப பெறும் பணியும் தற்போது நடக்கிறது.
இந்நிலையில், வால்பாறை அ.தி.மு.க., நகர செயலாளர் மயில்கணேஷ்,துணை செயலாளர் பொன்கணேஷ் ஆகியோர் தலைமையில், கட்சி நிர்வாகிகள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அதன்பின், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வினர் கள்ள ஓட்டு போட வசதியாக ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர்களை நேரடியாக சந்திக்காமல், படிவங்களை பூர்த்தி செய்து, போலியாக சேர்த்துள்ளனர். ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.
வால்பாறையிலிருந்து வெளியூர் சென்ற வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே, வால்பாறை மலைப்பகுதியில் போலியான வாக்காளர்களை அதிகாரிகள் கண்டறிந்து உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தாலுகா அலுவலகம் முன் அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்துவோம், என, தெரிவித்தனர்.
அங்கு பணியில் இருந்த வருவாய்த்துறை அலுவலர் பன்னீர்செல்வத்திடம், புகார் மனுவை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வக்கீல் பெருமாள், பா.ஜ., மண்டல் தலைவர் செந்தில்முருகன், வர்த்தக அணி நகர செயலாளர் சண்முகவேல், நகர இளைஞரணி செயலாளர் சசிக்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

