/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேட்டை மகா மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
/
பேட்டை மகா மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED : மே 01, 2025 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் எல்.எஸ். புரத்தில் பேட்டை மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 15ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 25ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. 29ம் தேதி இரவு பவானி ஆற்றில் இருந்து அம்மன் சுவாமி அழைத்துவரப்பட்டது.
நேற்று காலையில் பொங்கல் வைத்தலும் மதியம் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று இரவு அம்மன் திருவீதி உலாவும், இரண்டாம் தேதி மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.

