/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அஞ்சலக ஆதார் சேவை மையம்; அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி
/
அஞ்சலக ஆதார் சேவை மையம்; அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி
அஞ்சலக ஆதார் சேவை மையம்; அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி
அஞ்சலக ஆதார் சேவை மையம்; அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : டிச 09, 2025 08:11 AM

வால்பாறை: அஞ்சலக ஆதார் சேவை மையத்தின் சார்பில், அரசுப்பள்ளிகளில் ஆதார் பதிவு செய்யும் பணி துவங்கியது.
வால்பாறை நகரில் உள்ள அஞ்சலகத்தில், வாடிக்கையாளர் வசதிக்காக, கடந்த மூன்று ஆண்டுகளாக ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது.
இந்நிலையில்,அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வசதிக்காக, பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் உத்தரவின் பேரில், கோட்ட ஆய்வாளர் வெங்கட், போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலி ஆகியோர் தலைமையில்வால்பாறையில் உள்ள பள்ளிகளில் அஞ்சலக ஊழியர்கள் நேரடியாக சென்று ஆதார் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அஞ்சலக அதிகாரிகள் கூறியதாவது: வாடிக்கையாளர் வசதிக்காக துவங்கப்பட்ட ஆதார் சேவை மையத்தில், குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் ஆதார் எடுக்கப்படுகிறது.
தற்போது, பள்ளி மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அரசு பள்ளிகளுக்கு நேரடியாகச்சென்று ஆதார் பதிவு செய்யாத மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக பதிவு செய்யும் பணியும், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு ஆதார் அப்டேட் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், பள்ளி மாணவிகளை இணைக்கும் பணியும் நடக்கிறது.
இவ்வாறு, கூறினர்.

