/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் பிரதமர் மோடி "ரோடு ஷோ": வழிநெடுக மலர்தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

UPDATED : மார் 18, 2024 08:01 PM
ADDED : மார் 18, 2024 05:41 PM
கோவை: கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் சாலையின் இருபுறமும் திரண்ட பா.ஜ., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். பொய்க்கால் குதிரை வேடமிட்டும், வீணை இசைத்தும் பிரதமர் மோடியை இசைக் கலைஞர்கள் வரவேற்றனர்.
கர்நாடக மாநிலம் ஷிவமொகா விமான நிலையத்தில் இருந்து, தேர்தல் பிரசாரத்துக்காக இன்று(மார்ச் 18) மாலை கோவைக்கு பிரதமர் மோடி வந்தார். சாய்பாபா காலனியில் இருந்து துவங்கிய, 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, மக்களை நோக்கி கையசைத்தப்படி காரில் சென்றார். ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் திறந்தவெளி வாகனத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவை குண்டுவெடிப்பு: மோடி அஞ்சலி
பேரணியை நிறைவு செய்த பிரதமர் மோடி, 1998 கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.அதனை தொடர்ந்து காரில் புறப்பட்டுஇரவு, 7:15 மணிக்கு, ரேஸ்கோர்சில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று பிரதமர் மோடி ஓய்வெடுக்கிறார். நாளை கோவையில் இருந்து விமானம் மூலம் பாலக்காட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார்.