/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்லைனில் வாக்காளர் படிவம் பதிவேற்றுவதில் சிக்கல் : தளர்வு அளிக்க ஆணையத்துக்கு கன்ஸ்யூமர் காஸ் முறையீடு
/
ஆன்லைனில் வாக்காளர் படிவம் பதிவேற்றுவதில் சிக்கல் : தளர்வு அளிக்க ஆணையத்துக்கு கன்ஸ்யூமர் காஸ் முறையீடு
ஆன்லைனில் வாக்காளர் படிவம் பதிவேற்றுவதில் சிக்கல் : தளர்வு அளிக்க ஆணையத்துக்கு கன்ஸ்யூமர் காஸ் முறையீடு
ஆன்லைனில் வாக்காளர் படிவம் பதிவேற்றுவதில் சிக்கல் : தளர்வு அளிக்க ஆணையத்துக்கு கன்ஸ்யூமர் காஸ் முறையீடு
ADDED : நவ 14, 2025 10:12 PM
கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி வேகமாக நடந்து வருகிறது. 70 சதவீத வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கியுள்ளதால், பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது ஆன்லைனிலும் படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க, தேர்தல் ஆணையம் வசதி செய்திருக்கிறது. சின்ன சின்ன பிரச்னைகள் இருப்பதால், பதிவேற்ற முடிவதில்லை.இதுதொடர்பாக, கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு, இ-மெயிலில் அனுப்பிய கடிதம்:
வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை, ஆன்லைனில் சமர்ப்பிப்பது பலருக்கும் பயனுள்ளது. இது வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பெயர்கள் அச்சு அசலாக பொருந்தினால் மடடுமே சாத்தியமாகிறது.
ஆன்லைன் வசதியை பலரும் பயன்படுத்த முயற்சித்து, படிவங்களை பூர்த்தி செய்து, போட்டோ உள்ளிட்ட தகவல்களை பதிவேற்றும்போது, 'வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை பெயர்கள் பொருந்தவில்லை. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள்' என, கடைசி நிலையில் பதில் வருகிறது.
வாக்காளர் அட்டையில் இனிசியல் இருப்பதில்லை. ஆதார் அட்டையில் இனிசியல் இருப்பதால், பொருந்துவதில்லை. இதன் காரணமாக, தேர்தல் ஆணையம் வழங்கிய வசதியை, வாக்காளர்கள் பயன்படுத்த முடிவதில்லை. ஆன்லைனில் படிவம் சமர்ப்பிக்க உதவும் வகையில், சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.
வருமான வரித்துறையில் பான் கார்டு, ஆதார் இணைப்பு கட்டாயம். பான் கார்டில் பெயருடன் இனிசியல் விரிவாக்கம் இருக்கிறது. ஆதார் அட்டையில் இனிசியல் மட்டும் உள்ளது. அதனால், இணைப்பு கஷ்டமாக உள்ளது. பான் மற்றும் ஆதார் விபரங்களில் பிறந்த தேதி, பாலினம் சரியாக இருந்தால், இணைப்பை அனும திக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் முற்றிலும் வேறுபட்டிருந்தாலோ அல்லது பாலினம்/ பிறந்த தேதி பொருந்தவில்லை என்றாலோ, மட்டுமே இணைக்க முடியாது.
தேர்தல் ஆணையமும் இந்நடைமுறையை பரிசீலித்து, வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க, பான்-ஆதார் இணைப்புக்கான தளர்வை போன்ற ஏற்பாட்டை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

