/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயர்த்தி வழங்க அரசுக்கு கோரிக்கை
/
திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயர்த்தி வழங்க அரசுக்கு கோரிக்கை
திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயர்த்தி வழங்க அரசுக்கு கோரிக்கை
திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயர்த்தி வழங்க அரசுக்கு கோரிக்கை
ADDED : டிச 02, 2025 06:27 AM
பொள்ளாச்சி: ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக, ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, கிராம பகுதியில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வு எழுத தகுதி பெற்றவர்.
இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் வீதம் பிளஸ்- 2 வரை நான்கு ஆண்டுகள் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு தேர்வு கடந்த மாதம், 29ம் தேதி நடத்தப்படுவதாக இருந்தது. அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர், தேர்வு எழுத தயாராக இருந்த நிலையில், 'டிட்வா' புயல் காரணமாக, வரும், 6ம் தேதிக்கு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், திறனாய்வு தேர்வு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என, மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
திறனாய்வு தேர்வு வாயிலாக உதவித்தொகை வழங்க, மாவட்ட அளவில், சிறப்பான மதிப்பெண் பெறும், 50 மாணவர்கள், 50 மாணவியர் என, 100 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆனால், பல ஆண்டுகளாக, 1,000 ரூபாய் வழங்கப்படும் நிலையில் அதனை உயர்த்தி வழங்க வேண்டுமென மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். குறைந்த தொகை மட்டுமே வழங்கப்படுவதால், பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், இத்தேர்வில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதில்லை. துறை ரீதியான அதிகாரிகள், உதவித் தொகையை உயர்த்தி வழங்க, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

