/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்கா 2025 ஜூனில் திறப்பு; கள ஆய்வுக்கு பின் அறிவித்தார் முதல்வர்
/
செம்மொழி பூங்கா 2025 ஜூனில் திறப்பு; கள ஆய்வுக்கு பின் அறிவித்தார் முதல்வர்
செம்மொழி பூங்கா 2025 ஜூனில் திறப்பு; கள ஆய்வுக்கு பின் அறிவித்தார் முதல்வர்
செம்மொழி பூங்கா 2025 ஜூனில் திறப்பு; கள ஆய்வுக்கு பின் அறிவித்தார் முதல்வர்
ADDED : நவ 06, 2024 11:39 PM

கோவை ; கோவையில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்கா - பேஸ் 1 திட்டப்பணிகளை நேற்று ஆய்வு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின், 2025 ஜூன் மாதம் திறக்கப்படும் என அறிவித்தார்.
கோவை காந்திபுரத்தில் மத்திய சிறைக்குச் சொந்தமான, 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.172 கோடியில் செம்மொழிப் பூங்கா - பேஸ் 1 பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
'கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தில் கடந்த இரு நாட்கள் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், செம்மொழி பூங்கா உருவாக்கும் இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். 'டிக்கெட் கவுன்டர்' கட்டும் இடத்தை சுற்றிப்பார்த்த அவர், என்னென்ன மர வகைகள் மற்றும் பூ வகைகள் உருவாக்கப்பட உள்ளது குறித்துகேட்டறிந்தார்.
ராஜமுந்திரியில் இருந்து தருவிக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள், அழியக்கூடிய நிலையில் உள்ள சங்க கால மர வகைகள் மற்றும் பல்வேறு அரிய வகையான பூச்செடிகளை முதல்வர் பார்வையிட்டார். பூங்கா வளாகத்துக்குள் என்னென்ன பணிகள், மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது என்பதை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விளக்கினார்.
மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பது தொடர்பாக விளக்கப்பட்டது. பூங்கா வளாகத்தில் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் தொடர்பான வீடியோ, முதல்வருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர், 'பணிகளை எப்போது முழுமையாக முடிப்பீர்கள்' என, கேட்டார். அதற்கு, '2025ம் ஆண்டு மே மாதத்துக்குள் முடித்து விடலாம்' என, மாநகராட்சி கமிஷனர் உறுதியளித்தார்.
அதையடுத்து, நுாலகம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர், '2025 ஜூனில் செம்மொழி பூங்கா திறக்கப்படும்' என, அறிவித்தார்.

