/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர்., பதிவு மன உளைச்சலில் பி.எல்.ஓ.,க்கள்
/
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர்., பதிவு மன உளைச்சலில் பி.எல்.ஓ.,க்கள்
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர்., பதிவு மன உளைச்சலில் பி.எல்.ஓ.,க்கள்
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர்., பதிவு மன உளைச்சலில் பி.எல்.ஓ.,க்கள்
ADDED : டிச 07, 2025 07:30 AM
போத்தனூர்: கோவை, அவசர கதியில் எஸ். ஐ.ஆர்., பதிவேற்றத்தை முடிக்க, பி.எல்.ஓ.,க்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த இரு நாட்களாக, பி.எல்.ஓ.,க்கள் வாக்காளர்களால் பெறப்படாத விண்ணப்பங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய, உயரதிகாரிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
அவ்வகையில் வெள்ளலூர், சுந்தராபுரம், மதுக்கரை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விண்ணப்பங்கள், மதுக்கரை தாசில்தார் அலுவலகத்தில் வைத்து பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பி.எல்.ஓ.,க்கள் சிலர் கூறுகையில், 'ஒவ்வொரு பூத்திலும் மிக குறைந்தபட்சமாக, 25 விண்ணப்பங்கள் உரிய நபரால் பெறப்படாமல் உள்ளன. இவ்விண்ணப்பங்களை மூன்று நிலைகளில் ( நபர் இல்லாதது, இறப்பு, இடமாற்றம்) குறிப்பிட்டு, பதிவேற்றம் செய்ய வற்புறுத்துகின்றனர்.
அதுபோல் பதிவேற்றம் செய்யப்பட்ட நபர், கடந்த முறை நடந்த தேர்தலில் ஓட்டு போட்டிருந்தால், அவ்விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இல்லையெனில் நிராகரிக்கப்படும்.
இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் இதுபோல் செய்த பின், யாரேனும் விண்ணப்பம் கேட்டு வந்தால் என்ன செய்வது என தெரியவில்லை. மன உளைச்சல் ஏற்படுவதுதான் மிச்சம்' என்றனர்.

