/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபருக்கு கத்திக்குத்து: ஆறு பேர் சிறையிலடைப்பு
/
வாலிபருக்கு கத்திக்குத்து: ஆறு பேர் சிறையிலடைப்பு
ADDED : நவ 11, 2025 10:52 PM
கோவை: உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 24; தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அசைனார், என்பவரின் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் ரஞ்சித்குமார், தனது நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அசைனாரின் மனைவி தவ்லத் நிஷா, 47 மற்றும் அவரது மகன்கள் தகராறு செய்தனர். அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
கடந்த 9ம் தேதி இரவு மீண்டும், ரஞ்சித் குமார் வீட்டுக்கு தவ்லத் நிஷா, அவரது மகன்கள் உட்பட 6 பேர் சென்றனர்.
ரஞ்சித்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டினர். தவ்லத் நிஷா கத்தியால் ரஞ்சித் குமாரை குத்தினார். அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. ஆறு பேரும் ரஞ்சித்குமாரை மிரட்டி விட்டு தப்பினர்.
ரஞ்சித்குமார் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் கடைவீதி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில் முன் விரோதத்தால் ரஞ்சித்தை கத்தியால் குத்திய உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த தவ்லத் நிஷா, அவரது மகன்கள் அசாருதீன், 30, சல்மான்கான், 21, மற்றும் அதே பகுதியை சேர்ந்த அப்துல்கலாம், 20, உக்கடம் வின்சென்ட் ரோட்டை சேர்ந்த ராஜ்குமார், 22, உக்கடம் புல்லுக்காட்டை சேர்ந்த தவுபிக், 25 ஆகிய ஆறு பேரை, சிறையில் அடைத்தனர்.

