/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் கார்த்திகை மாத சோமவார சிறப்பு வழிபாடு
/
கோவில்களில் கார்த்திகை மாத சோமவார சிறப்பு வழிபாடு
ADDED : டிச 09, 2025 07:40 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கார்த்திகை சோமவாரத்தையொட்டி காலை, 9:00 மணிக்கு கலச ஆவாஹனம், ஸ்ரீ ருத்ர ஜப பாராயணம், காலை, 11:00 மணிக்கு மூலமந்த்ர ேஹாமம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன. மாலை, 5:00 மணிக்கு மஹா அபிேஷகம், 1,008 சங்காபிேஷகம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.
* சிங்காநல்லுார் மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவிலில், சோமவாரத்தையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
* சேரன் தொழிலாளர் காலனி செல்வவிநாயகர் கோவிலில், சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதுபோன்று, பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
* நெகமம், பல்லடம் ரோட்டில் உள்ள மரகதாம்பிகை உடனமர் மாயாண்டீஸ்வரர் கோவிலில், சோமவார வழிபாடு நடந்தது. இதில், நேற்று காலை, 108 வலம்புரி சங்குகள் வைத்து பூஜை நடந்தது. இதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

