/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ சத்ய சாய் நுாற்றாண்டு விழா : போத்தனுார் வழியாக சிறப்பு ரயில்
/
ஸ்ரீ சத்ய சாய் நுாற்றாண்டு விழா : போத்தனுார் வழியாக சிறப்பு ரயில்
ஸ்ரீ சத்ய சாய் நுாற்றாண்டு விழா : போத்தனுார் வழியாக சிறப்பு ரயில்
ஸ்ரீ சத்ய சாய் நுாற்றாண்டு விழா : போத்தனுார் வழியாக சிறப்பு ரயில்
ADDED : நவ 14, 2025 09:35 PM
கோவை: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, போத்தனூர் வழியாக, பெங்களூரு, திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 15ம் தேதி, மதியம் 1 மணிக்கு, பெங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06543), திருவனந்தபுரத்தை அடுத்த நாள் காலை, 6:40 மணிக்குச் சென்றடையும்.
இந்த ரயில், வரும் 15ம் தேதி, போத்தனூரை இரவு 10:20 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து காலை 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06544), அடுத்த நாள் அதிகாலை 3:30 மணிக்கு பெங்களூருவைச் சென்றடையும்.
இந்த ரயில், வரும் 16ம் தேதி, மாலை 6:20க்கு போத்தனூரை வந்தடையும். எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து, வரும் 22ம் தேதி மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06549), அடுத்த நாள் காலை 6:40 மணிக்கு, திருவனந்தபுரத்தை அடையும்.
இந்த ரயில் வரும் 22ம் தேதி இரவு 10:20 மணிக்கு போத்தனூரை வந்தடையும். மறுமார்க்கத்தில், வரும் 23ம் தேதி காலை 9:30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06550) அடுத்த நாள் அதிகாலை 3:30 மணிக்கு, எஸ்.எம்.வி.டி., பெங்களூருவை சென்றடையும்.
இந்த ரயில் வரும் 23ம் தேதி மாலை 6:20 மணிக்கு போத்தனூரை வந்தடையும். இந்த ரயில்கள், கிருஷ்ணராஜபுரம், பங்காரபேட், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

