/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்ச், 23ல் துவங்குகிறது எஸ்.ஆர்.கே., பிரசாத் கோப்பை
/
மார்ச், 23ல் துவங்குகிறது எஸ்.ஆர்.கே., பிரசாத் கோப்பை
மார்ச், 23ல் துவங்குகிறது எஸ்.ஆர்.கே., பிரசாத் கோப்பை
மார்ச், 23ல் துவங்குகிறது எஸ்.ஆர்.கே., பிரசாத் கோப்பை
ADDED : மார் 15, 2024 12:16 AM
கோவை;சி.ஐ.டி., கல்லுாரி சார்பில் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வரும், 23, 24 ஆகிய தேதிகளில் சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
சி.ஐ.டி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும்'டாக்டர் எஸ்.ஆர்.கே பிரசாத் நினைவு அலுமினி கோப்பை' விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டுக்கான போட்டிகள் மார்ச், 23, 24 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
இதில், மாணவ மாணவியருக்கு பூப்பந்து, கபடி, கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, கிரிக்கெட், தடகளம்,டேபிள் டென்னிஸ், செஸ், கோ கோ, ஹேண்ட்பால், டென்னிஸ், ஹாக்கி, த்ரோபால் ஆகிய போட்டிகள் நடக்கின்றன.
இப்போட்டிகளில் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பம் உள்ள அணிகள் 99443 33275 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அணிகளை வரும் 18ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

