/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரம் பாதிப்பு
/
கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஜூலை 09, 2025 10:00 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, 2வது வார்டு, ஜீவா வீதியில், குடியிருப்புகள் அதிகளவு உள்ளன. இங்கு, சாக்கடை கால்வாய் முறையாக பராமரிப்பின்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், சாக்கடை கால்வாய் முறையாக துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், கழிவுநீர் செல்லாமல், தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், கொசு உற்பத்தி பகுதியாக மாறியுள்ளதால், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது.
கால்வாயை துார்வார பலமுறை கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரோட்டில் வழிந்தோடும் கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
இதனால், மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். முறையாக கால்வாயை துார்வாரி கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

