/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு மாணவர்கள் தகுதி
/
'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு மாணவர்கள் தகுதி
'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு மாணவர்கள் தகுதி
'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு மாணவர்கள் தகுதி
ADDED : டிச 07, 2025 07:37 AM

கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், எஸ்.வி.ஜி.வி.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ பாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, தி பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளியிலிருந்து பங்கேற்ற மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
எஸ்.வி.ஜி.வி.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காரமடையில் உள்ள இப்பள்ளியில், நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 86 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர். இதில், 'பி' அணியின் ஆதித்யா, பாலசூர்யா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி தாளாளர் பழனிச்சாமி, முதல்வர் சசிகலா இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஸ்ரீ பாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கணேசபுரத்தில் உள்ள இப்பள்ளியில், நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 50 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர். இதில், 'எப்' அணியின் சந்தோஷ், அஸ்வின் கார்த்திகேயன் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி தாளாளர் பாக்கியம் இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தி பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி வடவள்ளியில் உள்ள இப்பள்ளியில், நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 130 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர்.
இதில், 'பி' அணியின் மகிழன், விஸ்வஜித் ராஜா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி முதல்வர் சுவர்ணலட்சுமி ரமேஷ், இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மாணவர்களின் சிந்தனையாற்றல், பொது அறிவு மற்றும் படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்க, 'தினமலர்' சார்பில், இத்தகைய வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சத்யா ஏஜென்சிஸ் கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.

