/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூராட்சிகளில் காலியிடம் ஆவணங்கள் சமர்ப்பிப்பு
/
பேரூராட்சிகளில் காலியிடம் ஆவணங்கள் சமர்ப்பிப்பு
ADDED : பிப் 03, 2025 04:12 AM
பெ.நா.பாளையம் : பேரூராட்சிகளில் காலியாக உள்ள வார்டுகளின் விபரங்கள் குறித்து, அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள், கோவை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் கடந்த, பிப்.,ல்,2022ம் ஆண்டு நடந்தது. இவ்மைப்புகளின் பதவிக்காலம் வரும், 2027ம் ஆண்டு வரை உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள வார்டுகளில் இடைத்தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. காலியாக உள்ள பதவிகள் தொடர்பாக உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.
இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் காலியாக உள்ள இரண்டாவது வார்டு குறித்த விபரங்களும், அதேபோல வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காலியாக உள்ள, 13 வது வார்டு விபரங்களும், அந்தந்த பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கோவை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில், காலியாக உள்ள வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் விபரம், ஆண், பெண் ஒதுக்கீடு, பதவி காலியிடமானது தகுதி இழப்பு, இறப்பு, ராஜினாமா உள்ளிட்ட ஏதேனும் ஒரு காரணத்தால் உருவானதா, அதைப் பற்றிய விபரங்கள், குறிப்பிட்ட வார்டில் தேர்தல் நடத்த சட்டபூர்வமான தடை உள்ளதா, அதற்கான விபரங்கள், எந்த தேதியில் இருந்து வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது உள்ளிட்ட விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

