/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுந்தராபுரம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
சுந்தராபுரம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சுந்தராபுரம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சுந்தராபுரம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 02, 2025 07:42 AM

போத்தனூர்: சுந்தராபுரம் அருகே கஸ்தூரி நகரிலுள்ள செல்வ விநாயகர் கோயில், ரூ.15 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த, 30ல் கணபதி, மகாலட்சுமி, நவகிரகம் ஹோமங்களுடன் துவங்கியது.
நேற்று காலை பூர்வாங்க பூஜைகள், மூலமந்திர ஜப ஹோமம், நாடி சந்தானம், பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவை நடந்தன.
முக்கிய நிகழ்வான செல்வவிநாயகர் விமானம் மூலாலயம், கும்பாபிஷேகம், சந்திரசேகர் சிவம் மற்றும் நடராஜன் ஆகியோரால் நடத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தச தரிசனம், தானம், மகா தீபாராதனையும், அன்னதானமும் நடந்தன. திரளானோர் விநாயகரை தரிசித்து சென்றனர்.
இன்று முதல், ஜன.18ம் தேதி வரை, தினமும் அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேக பூஜையுடன் மண்டல பூஜை நடக்கிறது.