sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடந்தது வைகுண்ட ஏகாதசி விழா

/

கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடந்தது வைகுண்ட ஏகாதசி விழா

கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடந்தது வைகுண்ட ஏகாதசி விழா

கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடந்தது வைகுண்ட ஏகாதசி விழா

1


ADDED : ஜன 11, 2025 09:34 AM

Google News

ADDED : ஜன 11, 2025 09:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி 'கோவிந்தா கோவிந்தா' முழக்கத்துடன் கோலாகலமாக நேற்று நடந்தது.

மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதி, ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில், பெருமாள், பள்ளி கொண்டுள்ள வைகுண்ட லோகத்தின் பரமபத வாசல் திறக்கப்படுவது ஐதீகம். இதனைக்குறிப்பதற்காக, ஏகாதசியான நேற்று, பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

* பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. திருக்கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகளால், காய்கறி, கனி, பல்வேறு திரவியங்கள், பொருட்கள் அடங்கிய சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, 'கோவிந்தா கோவிந்தா' கோஷம் முழங்க, பெருமாளை தரிசித்தனர்.

* கடைவீதி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், காய்கனி பந்தல் சொர்க்கவாசல் திறப்பு மற்றும் மார்கழி பூஜைகள் நடத்தப்பட்டன.

* டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவில், ஆனைமலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி ஸ்ரீ சீதா சமேத கோதண்டராமர் கோவில், ஜக்கார்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிபெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு ைவபவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

ஏகாதசியன்று துாக்கம் விழித்து, உணவு துறந்து பக்தி சிரத்தையோடு விரதம் மேற்கொண்ட பக்தர்கள், இன்று துவாதசியன்று விரதம் முடித்து பெருமாளை தரிசனம் செய்வர்.

* நெகமம், காட்டம்பட்டி புதூர் ஸ்ரீதேவி பூ தேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை முதலே, மூலவர் மற்றும் உற்சவருக்கு, தேன், பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட 16 வகையான திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நம்மாழ்வார் அழைப்பு நிகழ்ச்சி மற்றும் கோ பூஜை நடந்தது. காலை 5:30 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

* வால்பாறை, கருமலை பாலாஜிகோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மூலவர் பாலாஜிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும் நடைபெற்றது. காலை, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.அதனை தொடர்ந்து சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத, பாலாஜி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவைபாராயணம் நடந்தது.

உடுமலை


உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலுள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, டிச., 31ம் தேதி துவங்கி, பகல் பத்து உற்சவ விழாக்கள் நடந்து வந்தன.

தினமும், எம்பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், திருப்பல்லாண்டு, திருமொழி பாசுரங்கள் சேவை மற்றும் சிறப்பு அலங்காரம், தினமும் ஒவ்வொரு அவதாரங்களில் நம்பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.

பெருமாள் கோவில்களில், நேற்று அதிகாலை மூலவருக்கு,பால், தயிர், தேன், பழச்சாறு, நெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

தொடர்ந்து, பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்க, சொர்க்கவாசலில் கருட வாகனத்தில் எம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* பெரியகடை வீதியிலுள்ள ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு, கருட வாகனத்தில் எம்பெருமாள் சொர்க்க வாசலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* நெல்லுக்கடை வீதி சவுந்தரராஜ பெருமாள் கோவில், உடுமலை திருப்பதி வேங்கடேசபெருமாள் கோவில், சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில், அலமேலுமங்கா சீனிவாச பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளினர்.

* பிரசன்ன விநாயகர் கோவிலில், தனி சன்னதியில் அருள்பாலிக்கும் சவுரிராஜ பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

* உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு, எம்பெருமாள் திருவீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. வைகுண்ட ஏகாதசி விழா, ராப்பத்து உற்சவ நிகழ்ச்சிகள் துவங்கி, வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.

- நிருபர் குழு -






      Dinamalar
      Follow us