/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டீக்கடையில் இன்னும் இருக்கிறது தனி டம்ளர்'
/
'டீக்கடையில் இன்னும் இருக்கிறது தனி டம்ளர்'
ADDED : டிச 07, 2025 07:34 AM

கோவை: அம்பேத்கரின், 69வது நினைவு தினத்தை முன்னிட்டு,அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, இ.கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமை வகித்தார்.
வக்கீல் சுப்பிரமணியன், அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து பேசியதாவது: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்னும் பல கிராமங்களில் சாதி ஏற்ற தாழ்வுகள் உள்ளன. பட்டியல் பிரிவினர் இறந்தவர்களை மயானத்தில் அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது.
தேநீர் கடைகளில் தனிக் குவளையில் தேநீர் வழங்கும் நிலை உள்ளது. அம்பேத்கர் தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டார். அவரை போல், பட்டியல் பிரிவு மக்களின் உரிமைகளுக்காக அரசியல் கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் போராட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதில் இ.கம்யூ., மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் தங்கவேல், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சாந்தி சந்திரன், கலை இலக்கிய மன்ற செயலாளர் ரமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

