/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை ரயில்வே ஸ்டேஷன் இப்படித்தான் உருவானது!
/
கோவை ரயில்வே ஸ்டேஷன் இப்படித்தான் உருவானது!
ADDED : டிச 09, 2025 05:06 AM
1 862ம் ஆண்டில் போத்தனுாரில் தான், முதல் ரயில் நிலையம் இயங்கியது. அக்காலத்தில் இந்த ரயில் பாதை, ஒரு சிறிய ஏரிக்கும் வாலாங்குளத்துக்கும் நடுவே அமைந்த செயற்கைக்கரை மீது ஓடியது. இயற்கையோடும் ரயிலோடும் இணைந்து ஓடிய அந்தப் பாதை, கோவையின் வர்த்தகத்துக்கு முதல் வித்திட்டது.
பின், மேட்டுப்பாளையம் வரை பாதை நீட்டிக்கப்பட்டதும், கோவை ஒரு தனித்த இருப்புப் பாதை நிலையமாக உருவெடுத்தது. இன்று நமக்குப் பழக்கமான இந்த ரயில் நிலையம், அப்போது சிறிய கட்டடமாகத்தான் இருந்தது. திருச்சி பாதையும், அவிநாசி பாதையும் இடையே குறுகிய தளத்தில் இருந்த அந்தச் சிறு நிலையம், ஊர் வளர வளர மக்கள் தேவைக்கு போதாமல் போனது. இதனால் ரயில்வே துறை, கோவை நிலையத்தைப் பெரிதாக்கத் திட்டமிட்டது. முதலில் காட்டூரில், புதிய நிலையத்தைக் கட்ட யோசனை செய்தனர். பல கட்ட ஆலோசனைகளுக்கு பின், அதை விட்டு விட்டு, பழைய இடத்திலேயே பெருநிலையம் எழுப்ப முடிவு செய்தனர்.
அதற்காக திருச்சி பாதை மேல் ஒரு பாலம் கட்டி, அதன் மீது ரயில்களை ஓடச் செய்தனர். நிலையக் கட்டடமே பத்து அடி உயர்த்தப்பட்டு, கீழ்நிலையத்திற்கான நுழைவாயில்கள் மற்றும் படிக்கட்டுகளும் புதிதாக அமைக்கப்பட்டன. இதன் வாயிலாக, கோவை ரயில் நிலையம் புதிய அழகிலும், பயன்பாட்டிலும் பெரிதும் மேம்பட்டது. பின், சிங்காநல்லூரில் இருந்து நேரடி கிளை பாதையும், போத்தனூரிலிருந்து சிறிய ரயில் பாதையும் சேர்க்கப்பட்டன. அன்றைய பொருளாதார நிலைமையில் கூட, இந்த புதுநிலையப் பணிக்கு, 20 லட்சம் ரூபாய் செலவானது குறிப்பிடத்தக்கது.

