ADDED : மார் 19, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று காலை கோவை ஆனைகட்டி ரோடு, தண்ணீர் பந்தல் அருகே பி.டி.ஓ., ரவீந்திரன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ., மாணிக்கம், காவலர் சுரேந்திரன் ஆகியோர் அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர்
அதில் தடை செய்யப்பட்ட, 28 கிலோ புகையிலை பொருட்கள் இருந் தது. விசாரணையில், காரை ஓட்டி வந்தது சரவணம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கிருஷ்ணகுமார், 40, என தெரிய வந்தது.கார் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கிருஷ்ணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

