/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : நவ 14, 2025 09:37 PM
தெய்வீக கண்காட்சி சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு தெய்வீகத்தை நினைவுகூரும் வகையில், ஸ்ரீ சாயி சாசஷாத்காரம் அறக்கட்டளை, ஸ்ரீ சத்ய சாய் மாருதி சேவா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நாக சாய் அறக்கட்டளை இணைந்து, தெய்வீக கண்காட்சியை நடத்துகின்றன. இதில் பகவான் பாபாவின் வாழ்க்கையின் அரிய காட்சிகள், லீலைகள், சேவை மல்டிமீடியா காட்சிகளாக இடம் பெறுகின்றன. சாய்பாபா காலனி, நாகசாய் மந்திர், சாய் தீப் மண்டபத்தில் காலை 9 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடக்கிறது.
மருத்துவக் கண்காட்சி பாயன்ட் மீடியா சார்பில், 'மெடிக்கான் 2025' என்ற பி2பி மருத்துவ கண்காட்சி அவிநாசி ரோடு, கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. புதுமையான மருத்துவ தயாரிப்புகள், கருவிகள் மற்றும் சுகாதார தீர்வுகளை காட்சிப்படுத்தும் 120க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன. காலை 10 மணி முதல் கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.
ஆத்ம ராமாயணம் சோமையனுார், ஸ்வாகதம் சாய் மந்திர் சார்பில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது ஜெயந்தி விழா நடக்கிறது. காலை 7.30 மணி முதல் மகா கணபதி பூஜையும், காலை, 8.45 மணி முதல் பஜனை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு, முத்ரா நாட்டியாலயா குழுவினர் சார்பில், 'ஆத்ம ராமாயணம்' நாட்டிய நாடக நிகழ்ச்சி நடக்கிறது.
புத்தகக் கண்காட்சி தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட மைய நுாலகம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து, புத்தகக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்துகின்றன. மாவட்ட நுாலக அலுவலர் ராஜேந்திரன், காலை 11 மணிக்கு கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8:30 மணி வரை முகாம் நடக்கிறது.

