sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

 மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

 மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

 மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : டிச 07, 2025 07:33 AM

Google News

ADDED : டிச 07, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபிஷேக விழா கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் சார்பில் பேரூர், பட்டீஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி சன்னதியில் அபிஷேக விழா நடக்கிறது. 650 வது மாதாந்திர அபிஷேக விழா, காலை 9 மணி முதல் நடக்கிறது.

வேள்வி பூஜை சூலுார், பட்டணம், ஸ்ரீ கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. இதையொட்டி, இன்று மாலை 6 முதல் இரவு 9 மணி வரை வேள்வி பூஜைகள் நடக்கின்றன.

ஆன்மிக ஐயம் தெளிதல் மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில் வாராந்திரசத்சங்கம் நடக்கிறது. 'அறிவியல் ஆன்மிக ஐயம் தெளிதல்' என்ற தலைப்பில் மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை சுவாமி சங்கரானந்தா வழங்குகிறார்.

கைத்தறி ஆடை விற்பனை வேவர்ஸ் இந்தியா சார்பில், கைத்தறி ஆடைகளின் சிறப்பு விற்பனை அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்டபத்தில் நடக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி ஒடிசா, ஆந்திரா, ஜம்மு, ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களின் புகழ்பெற்ற ஆடை கலெக்சன் வாங்கலாம். காலை 10.30 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். அனுமதி இலவசம்.

ஓவியப் போட்டிகள் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டிகள், 'ஆர்ட்ஸ்பெயர்' என்ற தலைப்பில் சுந்தராபுரம், செங்கப்பகோனார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. காலை 8 மணி முதல் நடக்கும் போட்டியில், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

முத்தமிழ் திருவிழா கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில், குழந்தைகவிவேந்தர் வள்ளியப்பா -104, வீரமாமுனிவர் -346, கலைவாணர் கிருட்டிணன்118வது பிறந்தநாள் விழா நடக்கிறது. போத்தனுார், ரயில்வே மனமகிழ் மன்றத்தில், காலை 10.30 மணிக்கு விழா நடக்கிறது.

அமைதியின் அனுபவம் அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11.00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.

வீல்ஸ் மராத்தான் கங்கா மருத்துவமனை மற்றும் சிறுதுளி பவுண்டேஷன் சார்பில், வீல்ஸ் மராத்தான் இன்று நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் திறமையை ஊக்குவிக்கும் வகையில்,கவுணடம்பாளையம்,கங்காமுதுகுதண்டுவட சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில், காலை 6 மணிக்கு மராத்தான் நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுப ட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ். , நர்சரி பள்ளி மற்றும் குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில் இரவு, 7 முதல் 8.30 மணி வரை, முகாம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us