/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாக்கினாம்பட்டி வழித்தடத்தில் பஸ் சேவையை அதிகரிக்க வலியுறுத்தல்
/
மாக்கினாம்பட்டி வழித்தடத்தில் பஸ் சேவையை அதிகரிக்க வலியுறுத்தல்
மாக்கினாம்பட்டி வழித்தடத்தில் பஸ் சேவையை அதிகரிக்க வலியுறுத்தல்
மாக்கினாம்பட்டி வழித்தடத்தில் பஸ் சேவையை அதிகரிக்க வலியுறுத்தல்
ADDED : டிச 02, 2025 06:38 AM

பொள்ளாச்சி: 'பொள்ளாச்சி மாக்கினாம்பட்டிக்கு புதிய பஸ் சேவை வசதி செய்து தர வேண்டும்,' என, மாக்கினாம்பட்டி பகுதி மக்கள், சப் - கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனி, ஜம் ஜம் கார்டன், சன் கார்டன், கணேச புரம், வி.எஸ்.கே. கார்டன், ராயல் சிட்டி பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனி வழியாக, வழித்தட எண் - 49 என்ற ஒரே ஒரு அரசு பஸ் மட்டுமே சென்று வருகிறது. அந்த பஸ் போக்குவரதுக்கு போதுமானதாக இல்லை.எனவே, காலை, 7:30 மணி, மதியம், 12:30, மாலை, 5:45, இரவு, 7:45 மணிக்கு நாட்டுக்கல்பாளையம் வரை சென்று திரும்ப, புதிய பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்வோருக்கு மிக உதவியாக இருக்கும். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பொள்ளாச்சி வடக்கு, கிழக்கு ஒன்றிய பா.ஜ.வினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆச்சிப்பட்டி ஊராட்சியில், சேரன்நகர், ஸ்ரீனிவாசநகர், சங்கம்பாளையம் காலனி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, போஸ்டல் காலனி, சரஸ்வதி அவென்யூ ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது.
குப்பை கிடங்கில் தீ வைத்து புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம் ஏற்படுவதுடன் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சுகாதார பாதிப்பால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
இது குறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

