/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் பள்ளியில் 28ல் யோகா அணி தேர்வு
/
பெண்ணாடம் பள்ளியில் 28ல் யோகா அணி தேர்வு
ADDED : ஜூலை 26, 2024 04:27 AM
திட்டக்குடி: கடலுார் மாவட்ட யோகா அணி (புறநகர்) தேர்விற்கான போட்டி, வரும் 28ம் தேதி பெண் ணாடம் டேனிஷ்மிஷன் பள்ளியில் நடக்கிறது.
தமிழ்நாடு மாநில அளவிலான 37வது யோகா போட்டி, வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக, கடலுார் மாவட்ட யோகா அணியை(புறநகர்) தேர்வு செய்வதற்கான போட்டிகள், கடலுார் மாவட்ட யோகா சங்கம் சார்பில் வரும் 28ம் தேதி பெண்ணாடம் டேனிஷ்மிஷன் பள்ளியில் நடக்கிறது. இப்போட்டியில் 8வயதிற்கு மேல் உள்ள ஆண், பெண் அனைவரும் பங்கேற்கலாம்.
போட்டியில் ஒவ்வொரு வயது பிரிவிலும், முதல் மூன்று அதிக மதிப்பெண் பெறும் நபர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்படும். அடுத்த மூன்று மதிப்பெண் பெறுபவர்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு அவசியம்.
இத்தகவலை, கடலுார் மாவட்ட யோகா சங்கத்தின் மாவட்ட செயலாளர் சத்தியவிஜயன் தெரிவித்துள்ளார்.

