/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 26, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: நிலத்தகராறு தொடர்பாக பெண்ணைத் தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரம், ஆர்.சி., தெருவைச் சேர்ந்தவர் மகிமைதாஸ். இவரது சகோதரர் அலெக்சாண்டர். இவர்கள் இருவருக்குமிடையே 5 சென்ட் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
சில தினங்களுக்கு முன் அலெக்சாண்டர் தரப்பினர், மகிமைதாஸ் மனைவி பேபி ஷாலினியை திட்டி தாக்கியுள்ளனர். காயமடைந்த பேபி ஷாலினி, 33; கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில், அலெக்சாண்டர், சம்மனசு மேரி, குமார், அந்தோணி ஆகிய 4 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

