/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட நீதிமன்றத்தில் கலந்தாய்வுக் கூட்டம்
/
மாவட்ட நீதிமன்றத்தில் கலந்தாய்வுக் கூட்டம்
ADDED : ஜூலை 27, 2024 02:09 AM
கடலுார்: கடலுார் மாவட்ட நீதித்துறை மற்றும் காவல் துறை சார்பில் ஒருங்கிணைந்த கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கடலுார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி நாகராஜன் தலைமை தாங்கினார். எஸ்.பி., ராஜாராம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராகாத தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி லட்சுமி ரமேஷ், மாவட்ட அமர்வு நீதிபதி பிரகாஷ், ஏ.டி.எஸ்.பி.,க்கள் அசோக்குமார், தேவநாதன், பிரபாகரன், அரசு வழக்கு நடத்துமை துணை இயக்குனர் அம்சத் அலி, அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

