/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: மின் கட்டண உயர்வை கண்டித்து, இந்திய கம்யூ., கட்சி சார்பில் திட்டக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர்கள் மாணிக்கவேல், பன்னீர், முத்துலட்சுமி, சுமதி, அரவிந்தன், மாயவன், மாயவேல் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மின் கட்டண உயர்வை கண்டித்து உரையாற்றினார். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சின்னதம்பி, வட்ட செயலாளர் சந்தோஷ்குமார், துணைச் செயலாளர் பிரேம்குமார், மாதர் சங்க வட்ட செயலாளர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் சிவசங்கரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

