அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு
அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு
ADDED : ஜூலை 05, 2026 04:30 PM
கடலுார்: தமிழக அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடலுாரில் நடந்தது.
மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் குமார், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு செயலாளர் தேவதாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கார்மேகம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் அந்தோணி கணக்கு தணிக்கை பெற்று மாநில சங்கத்திற்கான பங்கு தொகை அளித்தார்.
ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், டி.எஸ்.பி., தமிழ் இனியன், பி.டி.ஓ., ராமச்சந்திரன் ஆகியோர் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு துறை ஊர்தி ஓட்டுநர்களின் பிள்ளைகளுக்கு பரிசு வழங்கினர். தலைமை சங்க ஆலோசகர் சுகந்தகுமார், துணை தலைவர்கள் ஜெயக்கொடி, மாநில தணிக்கையாளர் ரகுபதி, சகாதேவன் பேசினர். மாவட்ட துணைத் தலைவர்கள் ஞானம், ரவிச்சந்திரன், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் ஓட்டுநர்கள் அறை அல்லது அலுவலக இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பு செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார்.
