/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்முதல் நிலையம் அமைச்சர் திறந்து வைப்பு
/
கொள்முதல் நிலையம் அமைச்சர் திறந்து வைப்பு
ADDED : ஜூலை 27, 2024 02:50 AM

பெண்ணாடம் ;பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, முன்னாள் ஊராட்சி தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., சையத் மஹ்மூத், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் (தர கட்டுப்பாடு) குமார், தாசில்தார் அந்தோணி ராஜ், ஊராட்சி தலைவர் சின்னபிள்ளை முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பேசினார்.,
பின், முருகன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்து, அடிப்படை தேவைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

