பண்ருட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
பண்ருட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 02, 2026 09:53 PM
பண்ருட்டி: பண்ருட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, திருவதிகையில் நடந்தது. இதில், முன்னாள் தலைவர் சதாசிவம், முன்னாள் செயலாளர் அருள், முன்னாள் பொருளாளர் பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.
முன்னாள் ஆளுநர் மணி, பாபநாசம் சரவணன், முன்னாள் உதவி ஆளுநர்கள் பட்டுக்கோட்டை சிவசந்திரன், நெய்வேலி பாலாஜி குருமூர்த்தி, மாவட்ட உதவி ஆளுநர் பாரதிதாசன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் புதிய தலைவராக எஸ்.வி.ஜூவல்லர்ஸ் உரிமையாளர் அருள், செயலாளராக அருண்ராஜ், பொருளாளராக விஸ்வநாதன் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இதில் எம்.எல்.ஏ.மோகன், முன்னாள் உதவி ஆளுநர்கள் முத்துகுமரப்பன், மதன்சந்த், காமராஜ், ரவிசேகர், முன்னாள் தலைவர்கள் முத்துசுப்ரமணியன், ஏழுமலை,சண்முகம், வீரப்பன், பாலமுருகன், பன்னீர்செல்வம், செந்தில்குமார், ஜெ.கே.ஆர்.டெக்ஸ் ரமேஷ்காந்தி, தியாகு ஜூவல்லர்ஸ் கஜபதி, செந்தில்குமார், முரளி தங்க மாளிகை முரளிதரன், டாக்டர் மோகன்கமார், வள்ளிவிலாஸ் சரவணன், ஆர்.கே.எம்.கன்வென்ஷன் மாதவன், பேக்கரி மகேஷ், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன், அம்பிகை மோட்டார்ஸ் செந்தில்குமார், பூக்கடை குமார், ஒய்வுபெற்ற ஆர்.டி.ஓ., பன்னீர்செல்வம், குமாரசாமி இண்டஸ்டரீஸ் கார்த்திக், பைனான்சியர் ரமேஷ், வக்கீல் ராதாகிருஷ்ணன், அக்சயா பருப்பு மண்டி செந்தில்குமார், முந்திரி ஏற்றுமதியாளர் சங்க தலைவர் மலர்வாசகம், செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி , ரயில்வே சங்க சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிறைவில் அரசு மருத்துவமனைக்கு ஏர் பிரஷர் மிஷன், 15 துாய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை,காய்கறி பொருட்கள் வழங்கினர். ஏழை சலவை தொழிலாளிகளுக்கு இஸ்திரி பெட்டி வழங்கினர்.
