/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அலுவலக விருப்ப செய்தி... தொழிலாளர் குறைதீர் முகாம்
/
அலுவலக விருப்ப செய்தி... தொழிலாளர் குறைதீர் முகாம்
அலுவலக விருப்ப செய்தி... தொழிலாளர் குறைதீர் முகாம்
அலுவலக விருப்ப செய்தி... தொழிலாளர் குறைதீர் முகாம்
ADDED : ஜூலை 27, 2024 02:09 AM
கடலுார்: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் மற்றும் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் இணைந்து நடத்தும், குறைதீர் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடலுார் இ.எஸ்.ஐ.சி., கிளை மேலாளர் லுார்துசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் மற்றும் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் இணைந்து நடத்தும் குறை தீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் வரும், 29,ம் தேதி, சிதம்பரம் மேலரத வீதியில், கஸ்துாரிபாய் டெக்ஸ் எதிரில் நடக்க உள்ளது.
இதில், இ.எஸ்.ஐ.சி., கிளை மேலாளர் மற்றும் இ.பி.எப்.ஓ., அதிகாரி கலந்து கொள்கின்றனர். தொழிலாளர்கள் அனைவரும் இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.