ADDED : ஜூலை 08, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: வெள்ளாற்றிலிருந்து பைக்கில் மணல் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு பு.ஆதனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது,
பைக்கில் மணல் மூட்டை கடத்தி வந்தவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர், பு.ஆதனுார் மெயின்ரோட்டை சேர்ந்த செல்வராசு மகன் வீரராஜீ, 29; என தெரிந்தது.
போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பைக் மற்றும் மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
