/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட பணி பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
/
நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட பணி பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட பணி பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட பணி பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
ADDED : ஜூலை 27, 2024 02:49 AM

கிள்ளை: கிள்ளையில், நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
கிள்ளை பேரூராட்சியில் 2024-2025ம் ஆண்டின் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டப்பணி 6, 7 மற்றும் 9வது வார்டில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில், பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று கடலுார் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியை, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.
அவருடன், துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன், செயற் பொறியாளர் சண்முகம், செயல் அலுவலர் மருது பாண்டியன், தலைமை எழுத்தர் செல்வராஜ், கவுன்சிலர் யாஸ்மின் உட்பட பலர் பங்கேற்றனர்.