ADDED : ஜூலை 02, 2026 07:34 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: சேதமடைந்துள்ள பயணியர் நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு, புதிய நிழற்குடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
விருத்தாசலம் அடுத்த இருசாளகுப்பம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி கல்லுாரிகளுக்கும் விருத்தாசலம் – ஆலடி சாலையில் உள்ள பஸ் நிறுத்ததில் நின்று பஸ் ஏறிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இந்த பஸ் நிறுத்ததில் உள்ள பயணியர் நிழற்குடை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், கிராம மக்கள், மாணவர்கள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது.
எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
