ADDED : ஜூலை 27, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பெண் சாராய வியாபாரியை தடுப்பு காவலில் போலீசார் கைது செய்தனர்.
கடலுார், முதுநகர், வசந்தராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் மனைவி புனிதா, 40; சாராய வியாபாரி. இவர், கடந்த ஜூன் 27ம் தேதி வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 125 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் மீது, முதுநகர் காவல் நிலையத்தில் 42 சாராய வழக்குகள் உள்ளது. இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, தடுப்புக் காவலில் கைது செய்ய எஸ்.பி., ராஜாராம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்படி, கடலுார் மத்திய சிறையில் உள்ள புனிதாவை தடுப்புக் காவலில் கைது செய்து, வேலுாரில் பெண்கள் தனி சிறையில் அடைத்தனர்.

