/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
/
மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED : டிச 02, 2025 04:57 AM

கடலுார்: கடலுார் புதுவண்டிப்பாளையம் வரவூர் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத மூன்றாம் சோமவாரத்தையொட்டி அருந்தவநாயகி பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.
பூஜையை முன்னிட்டு காலை கோவில் பசுவிற்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஞானசித்தி விநாயகர் பூஜை, 108 சங்கு ஸ்தாபன பூஜை, அருந்தவநாயகி மூலமந்திர யாக வேள்வி நடந்தது. மதியம் யாக பூர்ணாஹூதி பூஜையுடன் 108 சங்காபிஷேகம் நடந்தது.
அருந்தவநாயகி நாமாவளி அர்ச்சனை, மகா தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட சங்கு தீர்த்தத்துடன் கூடிய பூஜை பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் பூஜையில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை வரவூர் மாரியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

