ADDED : ஜூலை 09, 2026 04:10 AM

கடலுார்: கடலுார் அருகே காரில் குட்கா கடத்திய, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்று கடலுார் அருகே சாவடி பகுதியில் டி.எஸ்.பி., தமிழ் இனியன் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் ஏராளமான மூட்டைகள் இருந்ததை பார்த்ததும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே போலீசார் காரில் இருந்த பொருட்களை சோதனை செய்ததில் அதில் குட்கா, கூல் லீப் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த வாலிபர்கள் குஜராத் மாநிலம் பெனாஸ் கட்டாவை சேர்ந்த பாபு 32; மற்றொருவர் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம், ஜெத்தாரன்கிராமத்தை சேர்ந்த விக்ரம் சவுத்ரி 28; என தெரிந்தது.
கடலுார் புதுநகர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 610 கிலோ குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
