/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமராட்சியில் 21ம் ஆண்டு குரு மரியாதை பெருவிழா
/
குமராட்சியில் 21ம் ஆண்டு குரு மரியாதை பெருவிழா
ADDED : டிச 09, 2025 07:05 AM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள குமராட்சியில் அகில பாரத சேவா சங்கம் சார்பில், 21ம் ஆண்டு குரு மரியாதை பெருவிழா நடந்தது.
குமராட்சி தயாநிதி திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு குருசாமி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாண்டியன் எம்.எல்.ஏ., அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட அன்னதான குழு தலைவர் ராஜமாரியப்பன் மற்றும் குமராட்சி வர்த்தக சங்கத் தலைவர் தமிழ்வாணன், ராமச்சந்திரன், சபதி கண்ணன், குமார், முரளி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை, அலங்காரம் நடந்தது.
பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி ஐயப்பன் வீதியுலா நடந்தது.

