/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் வழக்கறிஞருக்கு காதல் தொல்லை
/
பெண் வழக்கறிஞருக்கு காதல் தொல்லை
ADDED : டிச 02, 2025 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் பெண் வழக்கறிஞருக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுாரைச் சேர்ந்த 26 வயது பெண் வழக்கறிஞர். இவர், கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கத்தை சேர்ந்த ஜெய்பீம்தாசன், 30; என்பவர், தனக்கு அடிக்கடி காதல் தொல்லை கொடுப்பதாகவும், இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடலுார் புதுநகர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீ சார் வழக்குப் பதிந்து ஜெய்பீம்தாசனை நேற்று கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

