UPDATED : நவ 04, 2026 11:53 AM
ADDED : நவ 04, 2026 11:50 AM

அ நிறம் | அளவு
கடலுார்: சென்னையில் நடந்த விழாவில், கடலுார் மாவட்ட உலக திருக்குறள் பேரவை தலைவர் பாஸ்கரனுக்கு விருது வழங்கப்பட்டது.
சென்னையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2025ம் ஆண்டுக்கான, விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக கடலுார் மாவட்ட உலக திருக்குறள் பேரவை தலைவர் பாஸ்கரனுக்கு ‘தமிழ் செம்மல்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் விருது வழங்கி பாராட்டினர்.
