ADDED : ஜூலை 09, 2026 03:52 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பட்டா கத்தியை வைத்து ரீல்ஸ் போட்ட வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம் புதுவிளாங்குளத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ராஜா, 26; இவர் கடந்த, 2025ம் ஆண்டு செப்டம்பர், 28 ம் தேதி ஒருஅடி நீளமுள்ள பட்டா கத்தியை வைத்து தனது இன்ஸ்டா ஐ.டி.,யில் ரீல்ஸ் போட்டுள்ளார்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் போட்டதால், மங்கலம்பேட்டை போலீசார் ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
