/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் பா.ஜ., தலைவர் 'ஆருடம்'
/
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் பா.ஜ., தலைவர் 'ஆருடம்'
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் பா.ஜ., தலைவர் 'ஆருடம்'
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் பா.ஜ., தலைவர் 'ஆருடம்'
ADDED : டிச 07, 2025 05:51 AM

கடலுார்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என பா.ஜ., மாநில தலைவர் பேசினார்.
தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் யாத்திரையின் ஒரு பகுதியாக கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் நடந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.
கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன் தலைமையில் பா.ஜ.,நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு பிரச்சாரக்கூட்டத்தி ல் அவர் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் நானும் டெல்டா காரன் என அடிக்கடி கூறுவார். வெள்ள பாதிப்பிற்கு ஏக்கருக்கு 50ஆயிரம் கொடுக்க சொன்னால், இதுவரை பதிலே இல்லை.
ஆனால் முதல்வரின் வீட்டிற்கு எல்லா அமைச்சர்களின் நிவாரணமும் போய் சேர்கிறது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, முதல்வர் செய்ததாக சொல்லிக்கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றையும் சரிசெய்ய உருவாக்கப்பட்டதுதான் தே.ஜ., கூட்டணி. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.,மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன், த.மா.கா., ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

