/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கம்யூ., கட்சிகள் - வி.சி., கட்சி கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
கம்யூ., கட்சிகள் - வி.சி., கட்சி கடலுாரில் ஆர்ப்பாட்டம்
கம்யூ., கட்சிகள் - வி.சி., கட்சி கடலுாரில் ஆர்ப்பாட்டம்
கம்யூ., கட்சிகள் - வி.சி., கட்சி கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 09, 2025 07:06 AM

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் மா.கம்யூ., இந்திய கம்யூ., வி.சி., மற்றும் இந்திய கம்யூ., எம்.எல்., பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டதிற்கு, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூ., மாநில நிர்வாக குழு உறுப்பினர் கண்ணகி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட நிர்வாகி குளோப், வி.சி., கட்சி மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், மண்டல செயலாளர்கள் பரசு முருகையன், செல்லப்பன், இந்திய கம்யூ., (எம்.எல்) மாவட்ட குழு உறுப்பினர் ராஜசங்கர், மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையன், உதயகுமார், ராஜேஷ் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். மாநகர செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார்.